பசுமை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான சிறப்பு தேசிய மையம்
November 28 , 2022 900 days 449 0
மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது, பசுமைத் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான இந்தியாவின் முதல் தேசிய சிறப்பு மையத்தினை நிறுவ உள்ளதாக (NCoEGPS) அறிவித்தது.
இது மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டத்தின் கட்டமைப்பின் கீழ் செயல்பட உள்ளது.
இது இந்தியாவின் கப்பல் துறையில் கார்பன் நடுநிலை மற்றும் சுழற்சி முறை பொருளாதாரத்தை (CE) மேம்படுத்தச் செய்வதற்காக பசுமை முறையிலான கப்பல் போக்குவரத்தினை உருவாக்குவதற்கான ஒரு ஒழுங்குமுறைக் கட்டமைப்பையும் மாற்றுத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு செயல் திட்டத்தினை உருவாக்கச் செய்கிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் துறைமுகத்தில் கையாளப்படும் ஒரு டன் சரக்குக்கு வெளியிடப்படும் கார்பன் வெளியேற்றத்தை 30% வரையில் குறைப்பதனை துறைமுகங்கள் இலக்காகக் கொண்டுள்ளன.