பாரத் பெட்ரோலிய கழக நிறுவனமானது பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான அல்கலைன் (கார) மின்னாற்பகுப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளது.
இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதற்கான இத்தகைய முதல் வகை முன்னெடுப்பாகும்.
இது இந்தியாவின் ஆற்றல் கலப்பீட்டில் தற்போதுள்ள 38% புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கினை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்த முயல்கிறது.