போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2021
December 17 , 2021 1327 days 575 0
2021 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) (Narcotic Drugs and Psychotropic Substances) என்ற ஒரு மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இது விதிமுறைகளின் எண்ணிடல் முறையை மாற்றியமைப்பதற்காக வேண்டி ஒரு வாக்கியத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு அசாதாரண திருத்தமாகும்.
2021 ஆம் ஆண்டு மசோதாவானது 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் என்ற சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
இந்தத் திருத்தமானது ஒரு பிரிவு என்பது எதைக் குறிக்கிறது என்பதினைப் பற்றிய ஒரு சட்டப் பிரகடனத்தை உள்ளடக்கியதாகும்.
இதன்படி, 2014 ஆம் ஆண்டு முதல் 2வது பிரிவின் viii-a வகுப்பானது 27வது பிரிவின் viii-b வகுப்புடன் ஒத்துள்ளது.