TNPSC Thervupettagam

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்

February 14 , 2021 1616 days 639 0
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
  • இதை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமானது இந்தியாவின் ஓர் அரசு சாரா அமைப்பாகும்.
  • புதுதில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2,360 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இதில் 97.50% அங்கீகரிக்கப்படாதவை ஆகும்.
  • 2010 ஆம் ஆண்டில் 1,112 ஆக இருந்த பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 2,301 ஆக உயர்ந்துள்ளது.
  • பின்வருபவை அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகக் கருதப்படுகின்றன
    • புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அல்லது
    • மாநிலக் கட்சியாக மாற சட்டமன்றத் தேர்தல்களில் அல்லது பொதுத் தேர்தல்களில் போதுமான வாக்குகளைப் பெறாதவை அல்லது
    • பதிவு செய்யப்பட்டதிலிருந்து தேர்தலில் போட்டியிடாத கட்சிகள்.
  • பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்தால் மட்டுமே ஓர் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியானது ஒரு தேசியக் கட்சியாக அல்லது ஒரு மாநிலக்  கட்சியாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்