TNPSC Thervupettagam

பருவநிலையைத் தாங்கி வளரும் சோயாபீன் இரகங்கள்

October 20 , 2026 2 days 67 0
  • இந்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை (ICAR)-தேசிய சோயாபீன் ஆராய்ச்சி நிறுவனம் (NSRI) ஒரு ஹெக்டேருக்கு சுமார் 20 குவிண்டால் ஆரம்ப மகசூல் தரக்கூடிய புதிய சோயாபீன் இரகங்களான NRC 268 மற்றும் NRC 270 ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது.
  • NRC 268 மற்றும் NRC 270 ஆகியன மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சோயாபீன் (கிளைசின் மேக்ஸ்) இரகங்களாகும்.
  • இந்த இரகங்கள் சோயாபீன் உற்பத்தியை அதிகரிப்பதையும், வானிலை தொடர்பான பயிர் இழப்பைக் குறைப்பதையும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • NRC 270 ஆனது பெரிய விதைகள், அதிக விதை எடை மற்றும் சிறந்த சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.
  • இரண்டு இரகங்களும் ஒழுங்கற்ற மழை, வறட்சி காலங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • குறிப்பாக காரிஃப் பருவத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற சோயாபீன் விளையும் மாநிலங்களுக்கு இவை ஏற்றவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்