பலபரிமாண வறுமைக் குறியீடு மீதான ஒத்துழைப்புக் குழு
September 12 , 2020 1810 days 915 0
நிதி ஆயோக்கானது சன்யுக்தா சமாதர் என்பவரது தலைமையில் பலபரிமாண வறுமைக் குறியீடு மீதான ஒத்துழைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது,.
நிதி ஆயோக்கானது சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய MPI-ன் (Multidimensional Poverty Index) கண்காணிப்புச் செயல்முறையை வழங்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு முதன்மை நிறுவனமாகும்.
உலகளாவிய MPI என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட 29 உலகளாவியப் பிரிவுகளில் நாட்டின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட முடிவின் ஒரு பகுதியாகும்.
உலகளாவிய MPI என்பது 107 வளரும் நாடுகளை உள்ளடக்கிய பலபரிமாண வறுமையின் ஒரு சர்வதேசநடவடிக்கையாகும்.
உலகளாவிய MPI 2020-ன் படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.
இது முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு வறுமை & மனித மேம்பாட்டு முன்னெடுப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்டது.