தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (Atal Innovation Mission - AIM) இணைந்து இந்தியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence - AI) அடிப்படையிலான தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
AIஐ அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொகுதியானது 5,000 அடல் மேம்படுத்து ஆய்வகங்களில் (Atal Tinkering Labs - ATL) செயல்படுத்தப்படுகின்றது. இது 2.5 மில்லியன் மாணவர்களை மேம்படுத்த இருக்கின்றது.
இந்தத் தொகுதியானது செயல்பாடுகள், காணொளிகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு AIன் பல்வேறு கருத்துகளைக் கற்று, அதன் மூலம் பணியாற்ற மாணவர்களை அனுமதிக்கின்றது.
2030 ஆம் ஆண்டில், உலகளாவிய AI சந்தை மதிப்பானது 15 - 15.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரம்பில் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பங்கு ஏறத்தாழ 1 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.