பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited - HAL) வளாகத்தில் புதிய இலகு ரக போர் வானூர்தி உற்பத்தி விமானப் பணிமனையை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
எல்சிஎச் ஆனது HAL நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
500 கிலோகிராம் வெடி பொருள்களுடன் கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் இருக்கும் சியாச்சினில் உள்ள முன்னோக்குப் படைத் தளத்தில் தரையிறங்கிய முதலாவது தாக்குதல் வானூர்தி என்ற பெருமையை எல்சிஎச் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்குள் ரூ. 35,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்டுவதற்கான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இலகு ரக வானூர்தி உற்பத்தியானது இந்த இலக்கை அடைய இந்தியாவிற்கு உதவும் என்று நம்பப் படுகின்றது.