பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம் என்பது இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும்.
மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள்/மத்திய இடைமுக முகமைகள் மூலம் நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்துத் தகுதியானப் பயனாளிகளுக்கும் அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற வகையிலான பக்கா வீடுகளை வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறங்களையும் உள்ளடக்கியது.