மாவட்ட ரீதியாக சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் அளித்தல்
August 13 , 2022 1075 days 484 0
மதம் மற்றும் மொழி சார்ந்தச் சிறுபான்மையினர் சமூகங்களை மாவட்ட வாரியாக அடையாளம் காண்பது என்பது "சட்டத்திற்கு முரணானது" என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
மொழி மற்றும் மதச் சமூகங்களின் சிறுபான்மையினர் தகுதிநிலையானது மாநில வாரியாகக் கருதப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
2002 ஆம் ஆண்டில் T. M.A.பாய் மற்றும் கர்நாடக மாநில அரசு இடையே நடைபெற்ற வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய ஒரு பெரும்பான்மைத் தீர்ப்பைக் குறிப்பிட்டு நீதிபதி இதனைக் கூறினார்.
தற்போது, மத்திய அரசால் 1992 ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கானத் தேசிய ஆணையச் சட்டத்தின் 2(c) என்ற ஒரு சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட சமூகங்கள் மட்டுமே சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றன.