சர்ச்சைக்குரிய 2022 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்த மசோதாவானது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இது பல நிறுவனங்களுக்கு, மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் விநியோக வலை அமைப்புகளைத் தடையற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு நுகர்வோர் எந்தவொரு மின்சார சேவை வழங்குநர் நிறுவனத்தினையும் தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கும்.
இது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை தங்களது கட்டணத் திருத்தங்களை சரியான நேரத்தில் மேற்கொள்ளவும் சில்லறை மின் விநியோகத் துறையில் போட்டித் திறனை ஊக்குவிக்கவும் தூண்டுகிறது.
இலவசமாக வழங்குதல் என்ற கலாச்சாரம் மற்றும் மின் விநியோக நிறுவனங்களின் பெருகி வரும் நிலுவைத் தொகைகள் மீதான ஒரு புதுப்பிக்கப்பட்ட விவாதத்தின் மத்தியில் இந்த மசோதா முன்வைக்கப்படுகிறது.
இந்த மசோதா 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் மின் பகிர்மான நிறுவனங்கள், அந்தந்த மாநிலங்களின் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 57 சதவீதம் மொத்த நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளன.
அவற்றைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் ஆகியவை உள்ளன.