பிரிவு 167 குறித்த இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
November 19 , 2020 1744 days 738 0
இந்திய உச்ச நீதிமன்றமானது விசாரணை அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் விசாரணையை நிறைவு செய்யவில்லையெனில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு எதிரான வழக்கின் தன்மையைப் பொருட்படுத்தாமல், அவருக்கு “இயல்பு நிலை” மற்றும் “கட்டாயப் பிணை” ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 என்பதின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலான ஒரு சிறைத் தண்டனையுடன் கூடிய குற்றங்கள் ஆகியவற்றுக்காக வேண்டி அதிகபட்சம் 90 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும்.
ஆனால் பிற எந்தவொரு குற்றத்தில் தொடர்புடையவரையும் விசாரணைக்காக வேண்டி 60 நாட்கள் வரை மட்டுமே தடுப்புக் காவலில் வைக்க முடியும்.
விசாரணை அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் விசாரணையை நிறைவு செய்யவில்லையெனில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 167(2) என்பதின் கீழ் இயல்புநிலை பிணைக்காக வேண்டி ஒரு “விவரிக்க இயலாத உரிமை நிலையை” ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் கொண்டிருக்கின்றார்.