விவசாயம் தொடர்பான பின்வரும் மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவையாவன
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயச் சேவைகள் சட்டம், 2020
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், 2020
இந்தச் சட்டங்கள் விவசாயிகளை இடைத்தரகர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.
அவை அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளை (உள்நாட்டில் மண்டி என்று அழைக்கப்படும்) விவசாயிகள் புறக்கணிப்பதற்கும், தனியாருக்கு நேரடியாக பொருட்களை எளிதாக விற்பனை செய்வதற்கும் வேண்டி விவசாயிகளுக்கு உதவுகின்றன.
விவசாயிகள் இப்போது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு பிற மாநிலங்களில் விவசாயப் பொருட்களை விற்கலாம்.
இந்த நடைமுறை இந்தியாவில் ஒப்பந்த வேளாண்மை (contract farming) என அழைக்கப் படுகிறது.
வர்த்தகர்களை இந்தப் புதிய விதிமுறைகள் உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அனுமதிக்கின்றன.
இது வணிகர்கள், தொற்றுநோய் காலத்தில் ஏற்படும் விலை உயர்வை எளிதில் தங்களுக்கு அனுகூலமாக்கிக் கொள்ள உதவும்.
இத்தகைய நடவடிக்கை பழைய விதிகளின் கீழ் குற்றமாக கருதப் பட்டது.
விவசாயிகளின் கவலைகள்
இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் விவசாய நிலங்களில் 86 சதவீதத்திற்கும் அதிகமானவை தலா இரண்டு ஹெக்டேர் (ஐந்து ஏக்கர்) நிலத்தை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
சிறிய விவசாயிகள் தங்கள் பொருட்களைப் பெரிய நிறுவனங்களுக்கு விற்க நேரிடும் போது தங்களுக்குப் போதுமான பேரம் பேசும் சக்தி இருக்காது என்று அஞ்சுகிறார்கள்.
இந்தப் புதியச் சட்டங்களும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தங்களைக் கட்டாயம் ஆக்குவதில்லை.
இந்தப் புதிய விதிகள் எந்தவொருப் பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வேண்டி எந்தவொரு உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
தற்போதுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையும் ஒரு கட்டத்தில் ஒழிக்கப் படும் என்று விவசாயிகள் கவலைப்படுகிறார்கள்.