TNPSC Thervupettagam

பொது விநியோகத் திட்டத்தில் புதிய முன்னெடுப்புகள்

May 25 , 2025 16 days 68 0
  • மத்திய அரசானது, டிப்போட் தர்பன் வலை தளம், அன்ன மித்ரா மற்றும் அன்ன சஹாயதா போன்ற எண்ணிம தளங்கள் ஆகிய மூன்று முக்கியமான எண்ணிம முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்புகளானது, இந்தியாவின் பொது விநியோக முறையை (PDS) மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • டிப்போட் தர்பன் என்பது ஒரு எண்ணிம சுய மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு தளம் ஆகும்.
  • இது உணவுச் சேமிப்புக் கிடங்கு அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகளை முறையாக மதிப்பீடு செய்து மேம்படுத்துவதற்கான அதிகாரம் அளிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொது விநியோக அமைப்பில் முக்கியப் பங்குதாரர்களின் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அன்ன மித்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அன்ன சஹாயதா என்பது குடிமக்களுக்கு முன்னுரிமையளிக்கும் ஒரு குறை தீர்க்கும் தளமாகும்.
  • இது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் 81 கோடிக்கும் மேற்பட்டப் பயனாளிகளுக்கு சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • தற்போதையச் செயல்பாட்டில் அன்ன மித்ரா அசாம், உத்தரக்காண்ட், திரிபுரா மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
  • தற்போது ஒரு சோதனைக் கட்டத்தில் உள்ள அன்ன சஹாயதா குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் செயல் படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்