ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கையாளும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் உணவு தானியங்களை கண்டறிந்திட மத்திய அரசு ஒரு வரைபடத்தை (atlas) உருவாக்கி வருகிறது.
உள்ளூர் பகுதிகளில் கிடைக்கும் சத்தான புரதச் சத்து நிறைந்த உணவு தானியங்களை ஊக்குவிக்க இந்த வரைபடம் பயன்படுத்தப்படும்.
போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு “போஷான் வரைபடம்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இது பின்வருவனவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனம்
பில் & மெலிண்டா கேட்ஸ் அமைப்பு
உலக வங்கியின் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை - 2018 இன் படி, ஊட்டச்சத்து குறைபாடானது உற்பத்தித் திறன் இழப்பு, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஆண்டுக்கு குறைந்தது 10 பில்லியன் டாலர் செலவாகின்றது.