பிளவுப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது கோழி தீவனத்திற்கான ஒரு மூலப்பொருளாகும்.
மரபணு மாற்றப்பட்ட ஒரு பயிர் அல்லது தாவரம் என்பது நவீன உயிரித் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் பெறப்பட்ட மரபணுப் பொருட்களின் ஒரு புதிய கலவையாகும்.
குறிப்பு
மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவானது மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வணிக ரீதியிலான வெளியீட்டினை அனுமதிப்பதற்கான ஒரு உச்சநிலை அமைப்பு ஆகும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற ஒரு ஆணையமாகும்.