மாப்பில்லா கலகம் (அ) மலபார் கலகமானது மோப்லா கலகம் (மோப்லா கலவரம்) எனவும் அழைக்கப்படுகிறது.
1921 ஆம் ஆண்டின் மலபார் கலகமானது மலபார் பகுதியில் (வடக்கு கேரளா), பிரித்தானிய மற்றும் இந்து நிலக்கிழார்களை எதிர்த்து மோப்லாக்களால் (மலபார் முஸ்லீம்) 19வது மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர் கலவரத்தின் உச்சநிலையாகும்.
கிலாஃபத் இயக்கத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த எழுச்சியானது, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெற்றது.
இது வரியம் குன்னத் குஞ்சஹமது ஹாஜி என்பவர் தலைமையிலான ஓர் ஆயுதமேந்தியக் கிளர்ச்சி ஆகும்.
2021 ஆம் ஆண்டானது இந்த எழுச்சியின் 100வது நிறைவு ஆண்டாகும்.