குஜராத் முதலமைச்சர், குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பத்ரன் கிராமத்தில் முதலமைச்சர் கிராமோதயத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 2,666 கிராமங்களில் கிராமப் பஞ்சாயத்து கட்டிடங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
இந்தத் திட்டத்தில் சாலைகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம், சூரிய ஆற்றல் தெரு விளக்குகள், இ-கிராம் (மின்னணு கிராம சேவைகள்) மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவை அடங்கும்.
கிராமங்களில் கிராமப்புற நிர்வாகத்தையும் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.