TNPSC Thervupettagam

மும்பை விமான நிலையம் பசுமை எரிசக்திப் பயன்பாட்டிற்கு மாற்றம்

October 24 , 2022 1013 days 464 0
  • மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையமானது, அதன் ஆற்றல் நுகர்வுத் தேவைகளுக்காக முற்றிலும் பசுமை எரிசக்தி வள ஆதாரங்களுக்கு மாறியுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் 100 சதவீத நிலையான வளர்ச்சி கொண்ட விமான நிலையங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பசுமை ஆற்றலில் மட்டுமே முழுவதுமாக இயங்கும் கலப்பினத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இது அந்த விமான நிலையத்தினால், அதன் கார்பன் தடத்தைக் குறைத்து, 'நிகரச் சுழியம்' என்ற உமிழ்வை நோக்கி அதன் பயணத்தை மேலும் கொண்டுச் செல்லச் செய்வதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்