முல்லைப் பெரியாறு அணை குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை
December 5 , 2021 1369 days 555 0
உலகின் மிகப்பெரிய அணைகளில் 93% அணைகளானவை 25 நாடுகளில் அமைந்து உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு அணையின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.
ஆனால் 1895 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது நிலச் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் (அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் பகுதி) அமைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப் படுவர்.
இந்த அணை குறிப்பிடத்தக்க கட்டமைப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த அணையின் மேலாண்மையானது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கிடையில் ஒரு சர்ச்சைக்குரியப் பிரச்சினையாக உள்ளது.