முழுமையான கடல்சார் இருவாழ்வி - ஜெரோதோராக்ஸ் மரிடிமஸ்
October 30 , 2026 8 days 105 0
அறியப்பட்ட முதல் முழுமையான கடல்சார் இருவாழ்வியான ஜெரோதோராக்ஸ் மரிடிமஸின் (Gerrothorax maritimus) இரண்டு முழுமையான தொல்லுயிர் படிமங்கள் சீனாவின் குய்சோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெசோசோயிக் சகாப்தத்தின் பிற்பகுதி ட்ரயாசிக் காலத்தில் சுமார் 237 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழ்ந்துள்ளது.
இது இருவாழ்விகளின் பரிணாமப் பரம்பரையுடன் தொடர்புடைய, ஆரம்பகால நான்கு கால்கள் கொண்ட முதுகெலும்பிகளின் அழிந்துபோன குழுவான டெம்னோஸ்போண்டிலி (Temnospondyli) வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த இனத்திற்கு ஜெரோதோராக்ஸ் மரிடிமஸ் என்று பெயரிடப்பட்டது; "மரிடிமஸ்" என்பது அதன் கடல் வாழ்விடத்தைக் குறிக்கிறது.