TNPSC Thervupettagam

மேற்கு மண்டல ஆணையம்

January 10 , 2020 2047 days 790 0
  • மேற்கு மண்டல ஆணையத்தின் 25வது கூட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
  • இந்தக் கூட்டத்தின் இணைத் தலைவராக மகாராஷ்டிரா மாநில முதல்வர் செயல்படுவார். இந்தக் கூட்டத்தை மகாராஷ்டிரா மாநிலம் ஒருங்கிணைக்கின்றது.
  • இது நிகழ்நேரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு செயல் திட்டத்தையும் இணைய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வழங்க இருக்கின்றது.
  • இந்த ஆணையத்தின் 24வது கூட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோவாவில் நடத்தப்பட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கிடையேயான ஆணையச் செயலகத்தின் கீழ் மேற்கு மண்டல ஆணையமானது செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
  • இது கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையும் டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி என்ற ஒன்றியப் பிரதேசத்தையும் உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்