இந்திய இரயில்வே பாதுகாப்புப் படையானது, யாத்ரி சுரக்சா நடவடிக்கை என்று அழைக்கப் படும் இந்தியா முழுவதுமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், பயணிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கச் செய்வதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையினைத் தொடங்குவதற்காக, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக இரயில்வே பாதுகாப்புப் படை ஒரு மாத கால அளவிலான இந்தியா முழுவதுமான ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.