TNPSC Thervupettagam

வானத்தில் இந்தியத் தேசியக் கொடி

August 19 , 2022 1081 days 511 0
  • சுதந்திர தினத்தன்று, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பானது, புவியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் உயரத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றியது.
  • கொடியை ஏந்திச் சென்று வானில் விரியச் செய்த ஒரு பலூன் மூலம் புவியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்திற்குத் தேசியக் கொடி அனுப்பப்பட்டது.
  • ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது நாட்டிற்கான இளம் அறிவியலாளர்களை உருவாக்கி, எல்லைகளற்ற உலகம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்புகின்ற ஓர் அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது, சமீபத்தில் ஒரு செயற்கைக் கோளைப் புவி தாழ்மட்டச் சுற்றுப் பாதையில் ஏவியது.
  • சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள 750 மாணவியரால்  இந்த ஆசாதிசாட் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்