2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொகுதி வரையறையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.
2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்கள் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றைத் தொகுதிகளாகப் பிரிப்பதற்காக தொகுதி வரையறைச் சட்டம், 2002ன் கீழ் தொகுதி வரையறை ஆணையம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை நான்கு முறை தொகுதி வரையறை ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவையாவன:
1952ல் தொகுதி வரையறை ஆணையச் சட்டம், 1952ன் கீழ்,
1963ல் தொகுதி வரையறை ஆணையச் சட்டம், 1962ன் கீழ்,
1973ல் தொகுதி வரையறைச் சட்டம், 1972 ன் கீழ் மற்றும்
2002ல் தொகுதி வரையறைச் சட்டம், 2002ன் கீழ் தொகுதி வரையறை ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.