இது நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
இது படைப்பாற்றல் மிக்க வெளிப்பாடுகள் மற்றும் மொழிப் பரிமாற்றங்களை முறையாகத் துண்டிக்கக் கூடிய வகையிலான, புதுமை மற்றும் தொழில்முனைவுத் துறையில் மொழி சார்ந்த தடைகளைக் குறைப்பதற்கான ஒரு முன்முயற்சியாகும்.
இது படைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளிலும் புத்தாக்கச் சூழலைப் பெறும் வசதிகளை செயல்படுத்த முயல்கிறது.
அடல் புத்தாக்கத் திட்டமானது 22 பட்டியலிடப்பட்ட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒரு வட்டார மொழிப் படையைக் கண்டறிந்து அவற்றிற்குப் பயிற்சி அளிக்கும்.
மொழியியல் தடைகளையும் தாண்டி, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள புதுமைப் படைப்பாளர்களை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.