விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC)
February 10 , 2021 1674 days 701 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 ஆம் ஆண்டிற்கான தனது மத்திய நிதிநிலை அறிக்கையில் AIDC (Agricultural infrastructure and development cess) என்ற ஒரு வரியை விதிக்க முன்மொழிந்து உள்ளார்.
செஸ் எனப்படும் இந்த வரியானது அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எனவே இது பொருளுக்குப் பொருள் மாறுபடும்.
இது பெட்ரோல் மீது 1 லிட்டருக்கு ரூ.2.5 மற்றும் டீசல் மீது 1 லிட்டருக்கு ரூ.4 என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் விளைவாக தர அடையாளம் செய்யப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ஒரு லிட்டருக்கு ரூ .1.4 மற்றும் ரூ .1.8 என்ற கலால் வரி (உற்பத்தி வரி) விதிக்கப் பெறும்.
மேலும் தர அடையாளம் செய்யப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED - Special Additional Excise Duty) முறையே லிட்டருக்கு ரூ .11 மற்றும் ரூ .8 என்ற அளவில் இருக்கும்.
கலப்பு எரிபொருட்களுக்கு (Blended fuel) செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதில் எம் - 15 பெட்ரோல் மற்றும் இ - 20 பெட்ரோல் ஆகியவை அடங்கும்.