TNPSC Thervupettagam

டெல்டா கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 65.2 சதவிகிதம்

July 4 , 2021 1029 days 406 0
  • இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து தயாரித்தது.
  • அத்தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை அந்நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டது.
  • அதில், கரோனா தொற்று பாதிப்பின் தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளது.
  • பரிசோதனையின்போது கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களில் 12 சதவீதம் பேருக்கு பொதுவான சில பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டன.
  • சாதாரண அறிகுறிகளுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனை கோவேக்ஸின் தடுப்பூசி கொண்டுள்ளது.
  • டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது. நாட்டிலுள்ள 25 பல்வேறு பகுதிகளில் 25,798 போ் மீது கோவேக்ஸின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.
  • இது தொடா்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவா் கிருஷ்ணன் எல்லா கூறுகையில், ‘இந்தியாவில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் கோவேக்ஸின் தடுப்பூசியின் பரிசோதனையே மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. சா்வதேச தரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது‘ என்றார்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘3-ஆம் கட்ட பரிசோதனையில் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 77.8 சதவீதமாக உள்ளது.
  • பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆா் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு காரணமாக கோவேக்ஸின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.
  • உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் கோவேக்ஸின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுகிறது‘ என்றார்.

நன்றி: தினமணி  (04 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories