TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 29 , 2020 1543 days 1571 0
  • 10வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்ட தேர்தல் குழுவின் தேசிய விருதுகளின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரத்திற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விருதை இந்து தமிழ் நாளிதழ் வென்றுள்ளது.
    • தேசிய வாக்காளர் தினமானது 2020 ஜனவரி 25 அன்று கொண்டாடப்பட்டது.
  • கூடைப்பந்து விளையாட்டு வீரரான கோபி பிரையன்ட் (41 வயது) மற்றும் அவரது மகளான கியானா பிரையன்ட் (13 வயது) ஆகியோர் கலிபோர்னியாவின் கலாபாசஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்.
    • ஐந்து முறை தேசியக் கூடைப்பந்துக் கழக சாம்பியன் பட்டம் பெற்ற இவர் 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
  • கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய நான்காவது மாநிலமாக மேற்கு வங்க மாநிலம் உருவெடுத்துள்ளது.
  • அண்மையில் ஒடிசாவின் கேந்திரப்பாராவின் கரடாபூர் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் சுமார் 40 எருமைகள் சஹானா நோய் (ரத்தக்கசிவு செப்டிசீமியா) காரணமாக இறந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories